மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

“முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி”

மன்னார்குடியில் அரசு கல்லூரியில் 1980 – 1988-ம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மன்னை ராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் 1980 ஆண்டு முதல் 1988-ம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

1980 முதல் 1988 ஆண்டுகளில் படித்த பழைய மாணவர்கள் அரசு உயர் அதிகாரிகளாகவும் , மருத்துவராகவும் , தனியார்துறை, விளையாட்டுதுறை , அரசியல் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், உள்ளிட்ட சமுக வலைதளங்கள் மூலம் ஒன்று சேர்ந்த மாணவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

1980- 88 ஆண்டுகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் அண்ணாமலை, இருளப்பன், வெங்கடேசன், மணி , வீரமணி , மோகனசுந்தரம் உள்ளிட்ட பேராசிரியர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.

1983-ம் ஆண்டு பயின்ற மாணவணாக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசியபோது பலபோ் கல்லூரியை நேசித்து கொண்டிருப்பார்கள் நானோ கல்லூரியை சுவாசித்தவன் இந்த கல்லூரிதான் அரசியலில் என்னை மிக பெரிய உயரம் கிடைக்க அடித்தளம் வகுத்தது இந்த கல்லலூரிதான் வாழ்நாளில் ஒரு நொடி கூட மறக்க மாட்டேன் என்றார்.

முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி கல்லூரியில் உள்ள கம்பன் கலையரங்கத்திற்கு ரூபாய் 2 இலட்சம் மதிப்பிலான ஏசி கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இதில் ஒரு 2 டன் ஏசிக்கான தொகையினை முன்னாள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

கல்லூரி வளாகத்தில் முன்னாள் கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடி கல்லூரிக்கு அடிப்படையான தேவைகளை செய்வதாகவும் , தங்களால் இயன்ற உதவிகளை செய்து கல்வியில் சிறந்த கல்லூரியாக மன்னை இராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அனைத்து முன்னாள் மாணவர்களும் ஒன்றுகூடி புகைபடம் எடுத்து கொண்டனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *