கோவை மாவட்ட டிரெடிஷனல் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய தமிழ்நாடு மாநில கராத்தே விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…

தமிழ்நாடு மாநில கராத்தே விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்ட டிரெடிஷனல் கராத்தே சங்கம் இணைந்து நடத்திய இந்த போட்டிகளுக்கான துவக்க விழா கோவை மாவட்ட கராத்தே சங்க தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கராத்தே சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் ,யோகேஷ் கல்ரா,,தமிழ்நாடு தலைவர் மற்றும் அகில இந்திய தொழில் நுட்ப இயக்குனர் சாய்புரூஸ்,பொது செயலாளர் மோகன்,பொருளாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்…

கௌரவ அழைப்பாளராக பிரபல நடிகரும்,கராத்தே வீர்ரும் ஆன நடிகர் சுமன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டியில், சென்னை,மதுரை,கோவை, தூத்துக்குடி, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, , திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றனர்..

போட்டிகள் வயது அடிப்படையில் சீனியர்,ஜீனியர்,சப் ஜூனியர்,கேடர் என பிரிக்கப்பட்டு, சிறுவர்களுக்கு தனியாகவும், சிறுமிகளுக்கு தனியாகவும் நடைபெற்றது. கட்டா மற்றும் குமித்தே பிரிவில் தனி மற்றும் குழு போட்டிகள் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், கலந்து கொண்ட வீரர்,வீராங்கனைகள் அசத்தலாக தங்களது சண்டை திறனை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *