மன்னார்குடி செய்தியாளர்  தருண்சுரேஷ்

“அரசு பள்ளிக்கு ரூ 5 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தொழில் அதிபர்”

கோட்டூர் அருகே அரசு பள்ளிக்கு தனது சொந்த நிதியில் ரூ 5 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தொழில் அதிபர் பழனிச்சாமிக்கு மாண, மாணவியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்

திருவாரூர்  மாவட்டம், திருமக்கோட்டை அருகே வல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் அரசு விழா மற்றும் ஆண்டு கலை விழா நடத்துவதற்கு கலையரங்க கட்டடிடம் இல்லை என சிங்கப்பூர் தொழில் அதிபர் பழனிச்சாமியிடம் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி அதில் கிராமப்புற குழந்தைகள் கல்வி பயிலும் வகையில் மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்களது கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பழனிச்சாமி என்பவர் தனது சொந்த நிதியிலிருந்து சுமார் ரூ 5 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டி தருவதாக உத்தரவு அளிதிருந்தார்.

இந்த நிலையில் கட்டுமான பணிகள் முடிவடைந்து கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது கலையரங்கத்தை தொழில் அதிபர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட கல்வி குழுத்தலைவர் கலைவாணி மோகன் , கோட்டூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன், உள்ளிட்ட வட்டார கல்வி அலுவலர்கள் , தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் ,மாணவ, மாணவியர்கள் , பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *