திருவாரூரில் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த தின விழா புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த தின விழா திருவாரூர் நகரத்திற்குட்பட்ட தெற்கு வீதியில் அமைந்துள்ள ஏ கே எம் திருமண அரங்கில் நடைபெற்றது

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார் நிகழ்வில் பங்கேற்ற புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது பேசியதாவது ஒரு நாட்டின் முதலமைச்சர் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் நாட்டை வழிநடத்த வேண்டும் மக்கள் நலத்திட்டங்கள் கட்டுமான பணிகளை எப்படி உருவாக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக காமராஜ் இருந்துள்ளார்

அவர் முதலமைச்சராக இருந்த காலம் தமிழகம் பொற்காலமாக இருந்தது காமராஜர் காலத்தில் தொழிற்சாலைகள் தொடங்குவதில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்திற்கு வந்தது அவர் உருவாக்கிய அணைகள் உருக்கலைகள் மின் நிலையங்கள் 22, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றை குறுகிய காலத்திலேயே கொண்டு வந்தார்

விண்வெளி ஆராய்ச்சியில் நாம் சாதனை படைத்துள்ளோம் நான் 2013 ஆம் ஆண்டு இந்தத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தபோது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்புவது குறித்து முடிவெடுக்க வேண்டி இருந்தது இதற்காக 500 கோடி செலவிடுவதால் என்ன பயன் கிடைக்கப் போகிறது

என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின செவ்வாயில் தாது பொருட்கள் தண்ணீர் ஆக்சிஜன் உள்ளதா மனிதர்கள் வாழ முடியும் என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது

ஏற்கனவே அமெரிக்கா ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகள் செவ்வாய் விண்கலத்தை அனுப்பி உள்ளனர் அமெரிக்கா இந்த முயற்சியில் நான்காவது முறைதான் வெற்றி பெற்றது ரஷ்ய ஐரோப்பிய நாடுகள் மூன்றாவது முயற்சியில் நான் வெற்றி பெற்றது அன்றைய பாரத பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் பெற்று அதே ஆண்டு விண்கலம் செலுத்தப்பட்டது

2014 ஆம் ஆண்டு தனது முதன் முயற்சியிலேயே இந்தியா செவ்வாய்க் கிரகத்தில் விண்கலத்தை இறக்கி சாதனை படைத்தது நாங்கள் ஆரம்பித்த பிறகு ஆட்சிக்கு வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அதனை முறையாக தொடங்கி வைத்தார் கூடங்குளம் போராட்டத்தில் சுமார் 20 ஆயிரம் திரண்டு போராடி உள்ளனர் பத்தாயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டத்தை தடுக்க வேண்டும் என மக்களிடம் பேசினோம் அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பேசினர் ஆனால் தற்பொழுது மூன்று ஆயிரம் வாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வருகிறது என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *