வலங்கைமான் தாலுகா வில் விரைவில் 9ஆயிரம்
எக்டேரில் சம்பா சாகுபடி பணிகள் துவங்க உள்ள
நிலையில், மேட்டூர் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள்
மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.


டெல்டா மாவட்டங்களில்பாசனத்திற்கு மேட்டூர் அணையை கடந்த ஜூன் மாதம் 12-ம்தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 16-ம்தேதி கல்லணை பாசனத்திற்கு திறக்கப்பட்டது. இதைய டுத்து வலங்கைமான்தாலுகாவில் சுமார் 4000
எக்டேரில் குறுவை சாகு படி பணி மேற்கொள்ளப்
பட்டது. டெல்டா மாவட்ட ங்களை பாசனத்திற்கு
மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டு ம் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்து வருவ தால் டெல்டா விவசாயி கள் கவலை அடைந்திருந்தனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் தென் மேற்குப் பருவமழை
தீவிரம் அடைந்துள்ள தால், காவிரி ஆற்றில்
திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.


கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர்
திறக்கப்பட்டடுள்ள நிலையில், ஒகேனக்கல்
அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாகஅதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கபினிமற்றும் கிருஷ்ணராஜ
சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனைய
டுத்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டடு
வருகிறது. வினாடிக்கு25,000கன அடி தண்ணீர்திறந்து விடப்பட்டுள்ளது.


கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில்
தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின்அளவு அதிகரிக்கப்பட்டு
வருகிறது. கர்நாடகாவில்இருந்து திறக்கப்படும்தண்ணீர் தமிழ்நாடு கர்நாடகா எல்லையானபிலிகுண்டுலு வழியாக
இரண்டு நாட்கள் முன்புதர்மபுரி மாவட்டம் ஒகேன
க் கல்லை வந்தடைந்தது.


இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 17,000கன அடியாக உயர்ந்துள் ளது. நேற்று 12 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில் தற்போது 17
ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக் கிறது. இதன் காரணமாகமேட்டூர் அணை நீர் மட்டம்உயர்ந்து வரும் நிலையில் விவசாயிகள்சம்பா சாகுபடி பணிகளை மிகுந்த ஆர்வத்துடன் மேற்கொள்ள உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா வில் சுமார் 9ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடிபணிகள் மேற்கொள்ளப்
பட உள்ளது. வலங்கை மான் மற்றும் சுற்றுவட்டரா பகுதிகளில்
கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி யில் புழதி உழவு செய்துநேரடி விதைப்பு வாய்ப்புமிகவும் குறைவாக உள்ளது. இருப்பினும் ஆட்கள் பற்றாக்குறை களை சமாளிக்கவும்,நிர்வாக செலவு குறைவுஆகியவற்றால் விவசாயி கள் சேற்று உழவு செய்துநேரடி விதைப்பு செய்வத ற்கு அதிக ஆர்வமாக உள்ளனர்.

நீண்டகால ரகங்களை சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் ஆகஸ்ட் 15க்குள் விதை விடும் பணி
யை மேற்கொள்ள உள்ளனர்.

குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்தால் கவலைய டைந்துள்ள நிலையில்,
தற்போது மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்து வருவதை அடுத்து டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடி உரிய நேரத்தில்
மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *