தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்;-

தென்காசி மாவட்டம் ஆய்குடி அருகேஅகரக்கட்டில்தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின்தலைமை அலுவலகத்தில் நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த 23 – 07 – 2023 அன்று சாம்பவர் வடகரையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜருடைய 121 வது பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்து சிறப்பாக நடத்த உதவி செய்த அனைத்து நாடார் உறவின்முறை நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டதுசங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பேசிய அகரக்கட்டு லூர்து நாடார் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து கல்விக்கூடங்களை கட்டி தமிழகத்தில் ஒரு மாணவ மாணவிகள் கூட கல்வி கற்காமல் இருக்கக் கூடாது.

என்பதற்காக மாணவர்களுக்கு மதிய உணவு தந்து ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கி தமிழகத்தின் எதிர்காலமும் மாணவ மாணவிகளின் எதிர்காலமும் ஆசிரியர்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது.

என்று ஆசிரியர்களை பணிவோடு கேட்டுக் கொண்டவர் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராசர் தமிழகம் இன்று கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்ததற்கு மிகவும் காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
காமராஜருக்கு பின்பு தமிழகத்தை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் கட்டப்பட்டு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இவருக்கு பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கு மதுரையில் நூற்றாண்டு நூலகத்தை கட்டி மான்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்கள்.
இதேபோல தமிழகத்தை கல்வி வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் தென்காசியில் காமராஜர் நூற்றாண்டு நூலகம் தமிழக அரசு சார்பில் கட்ட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

என்றும் பெருந்தலைவர் மீது பற்று கொண்ட முதல்வர் அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று தென்காசியில் பெருந்தலைவர் காமராஜருக்கு நூற்றாண்டு நூலகம் கட்டுவார்கள் என்று நம்புகின்றோம் என்று பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து
மாவட்ட துணைச் செயலாளர் மோகன் ;
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் காளிராஜ் ராம்குமார் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் இசக்கி தாஸ் செங்கோட்டை ஒன்றிய துணைச் செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *