உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு தாய்ப்பால் கொடுப்பதை செயல்படுத்துதல் எனும் நோக்கத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெண்கள் மட்டும் உறுப்பனர்களாக உள்ள கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் தலைவர் புவனா சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பிறந்த குழந்தையின் உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கு தாய்ப்பால் மிகவும் உதவியாக இருப்பதாகவும், தாய்ப்பால் தேவை உள்ள குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கக்கூடிய தாய்மார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த பேரணி அமைக்கப்பட்டுள்ளது

தாய்ப்பால் கெட்டு விடக்கூடாது என்பதை பேணி காப்பதற்கு குளிர்சாதன வசதியை மருத்துவமனை நிர்வாகம் வழங்குகின்றனர்

கோவை மாநகரில் பாலூட்டுவதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளது கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் காவல்துறையில் உள்ள தாய்மார்கள் பெண் காவலர்கள் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் அவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படும் என தெரிவித்தார்..

பேரணியில்,குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்., என் தாயின் உதிரம் என் உயிரை காக்கும் ஆயுதம், தாய்ப்பால் தருவது, தாயின் உடல்நலனுக்கும் சிறந்த ஒன்று உள்ளிட்ட பல்வேறு தாய்ப்பலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நூறுக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்..

ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி குழந்தைகள் நல மாசானிக் மருத்துவமனையில் நிறைவு பெற்றது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *