சத்து மிகுந்த வெண்டை சாகுபடியில் 100 நாளில் ஏக்கருக்கு 6 டன் வரை மகசூல்,தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு.

ஆடிப் பட்டம்தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப
சத்து மிகுந்த வெண்டை சாகுபடி செய்து 45 வது
நாள் முதல் 100 நாட்கள் வரை இரண்டு நாட்களு க்கு ஒரு முறை மகசூல்பெறலாம் எனத் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெண்டையை அனைத்து வகை மண் ணிலும் பயிரிடலாம். நல்ல உரச் சத்துள்ள மண் வகைகளில் நன்றாக வளரும். கார, அமில நிலையை ஒரளவுதாங்கி வளரும். வெண்டை பயிரிட ஜூன்-ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி-மார்ச் மாதங்கள் ஏற்றவை. வெண்டை யில் சாதாரண ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்
களும் சாகுபடிக்கு ஏற்றவை.

விதையைப்பொருத்தவரை சாதாரண ரகங்களுக்கு ஏக்கருக்கு 3 கிலோவும்,வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஏக்கருக்கு 1.5 கிலோவும்தேவை. மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். அடியுர மாக ஏக்கருக்கு 10டன் தொழ உரமிட வேண்டும்.

வெண்டை விதைகளை விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன் கிலோ வுக்கு 2 கிராம் கார்பண் டசிம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைகளை 400 கிராம் அசோஸ்பை ரில்லம் மற்றும் ஆறிய
அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர வைக்க வேண்டும். 45 செ. மீ., இடைவெளியில்பார் அமைத்து 30 செ. மீ.,
இடைவெளியில் 2 விதை கள் வீதம் 2 செ. மீ, ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

பத்து நாள்க ளுக்குப் பின் நன்றாக உள்ள செடியை வைத்துக் கொண்டு மற்றதைக் களைத்து விடவேண்டும். விதைத்த பின் வாரத்திற்கு ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது நல்லது. அடியுரமாக ஏக்கருக்கு 8கிலோ தழை சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியா, 20 கிலோ
மணிச்சத்து தரக்கூடிய 125 கிலோ சூப்பர் பாஸ் பேட், 16 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய 27 கிலோ மூரேட் ஆப் பொட்
டாஷ் உரங்களை அடியுர மாக இட வேண்டும்.

விதைத்த 30நாள்கள் கழித்து 8கிலோ தழைச் சத்து. தரக்கூடிய 18 கிலோ யூரியாவை மேலுரமாக இடவேண்டும். ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர வைக்க வேண்டும். 45 செ. மீ,இடைவெளியில் பார் அமைத்து 30 செ. மீஇடைவெளியில் 2விதைகள் வீதம் 2 செ. மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். பத்து நாட்களுக்குப் பின்நன்றாக உள்ள செடியை வைத்துக் கொண்டு மற்றதைக் களைத்து விட வேண்டும்.

விதைத்த பின் வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது நல்லது. அடியுரமாக ஏக்கருக்கு 8கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 125கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய 27கிலோ மூராட் ஆப் பொட்டாஷ்உரங்களை அடியுரமாக இட வேண்டும். விதைத்த 30 நாள் கழித்து 8கிலோதழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியாவை மேலு ரமாக இடவேண்டும்.

ஏக்கருக்கு800கிராம்அசோஸ் பைரில்லம் மற்றும் 800கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, 20 கிலோ நன்கு மக்கிய தொழ உரத்துடன் கலந்து மண்ணில் நேரடியாக இட்டு, தழை மற்றும் மணிச்சத்து உரத் தேவை
யைக் குறைத்துக் கொள்ளலாம்.

விதைத்த45-ம் நாள் முதல் இரண்டுநாள்களுக்கு ஒரு முறை
அறுவடை செய்யலாம். 90முதல் 100 நாள்களில் ஏக்கருக்கு ஆறு டன் வரை மகசூல் எடுக்க லாம்.

எனவே வெண்டை சாகுபடி செய்ய விரும்பும்விவசாயிகள் இந்த ஆடிப்பட்டத்தில் முறையான சாகுபடி முறைகளைக் கடைப்பிடித்து நிறை வான மகசூல் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *