மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மன்னார்குடியில் ஒ.பி.எஸ் அணியினர் அ.ம.மு.க வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாட்டில் நடைபெற்ற கொலை ,கொள்ளை வழக்கை தமிழக அரசு விரைந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதைபோல் கொலை கொள்ளை வழக்கில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளுக்கு தமிழக அரசு உரிய தண்டனை பெற்று தர வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஓ.பி.எஸ் மற்றும் அமமுக சார்பில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓ.பி.எஸ் தரப்பு மற்றும் அமமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆாப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வின் ஒ.பி.எஸ் அணி மாவட்ட செயலர் சிவ. நாராயணசாமி தலைமை வகித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலர் எஸ். காமராஜ் மாநில விவசாய பிரிவு செயலாளர் மலர்வேந்தன், ஒன்றிய செயலாளர் அசோகன் ,மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கராஜ் ,ஓ.பி.எஸ் அணி அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ பக்கிரி சாமி  ,மேற்கு ஒன்றிய செயலாளர் ஷேக்கு , நீடாமங்கலம் ஒன்றிய செயலர் தனபால் உள்ளிட்ட  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்-  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தி.மு.க அரசு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அதில் தொடர்புடைய முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்கள், மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  நடந்த கண்டன ஆர்பாட்த்தில் அ.தி.மு.கவினரும் அ.ம. மு.கவினரும் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் ஹரிகிருஷ்ணன்  வரவேற்றார். நகர அ.ம.மு.க செயலர் ஆனந்தராஜ்  இறுதில் நன்றி கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *