மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்

சின்ன திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அச்சிறுப்பாக்கம்ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல
குழு மற்றும் தென்னிந்திய இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் மாலை 5 மணி அளவில் அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வஜ்ரகிரி வழிவிடு விநாயகர் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும், வேத மந்திரங்கள் ஒலிக்க, திருவாசகம், திருப்பதிகம்பாடி குரு மகா சன்னிதானம்,
ஸ்ரீ வஜ்ரகிரி மகான் வடபாதி ஆதீனம் சித்தர் சுவாமிகள் தலைமைய தவத்திரு. காஞ்சிபுரம் பவானி சங்கர்
சுவாமிகள் அவர்கள்,ஸ்ரீ பாலாம்பிகை ரஜினி சுவாமிகள்,
அச்சிறுப்பாக்கம் செங்கோல் சங்கிலி பாபாஜி சுவாமிகள், தவத்திருதில்லைஅம்பல மகா மந்திர குருஜி, திருவண்ணாமலை தங்கதுரை சுவாமிகள்
முன்னிலையில்சங்கு நாதங்கள் முழங்க,மகா தீபாராதனை காண்பித்து அவர்களுடைய திருக்கரங்களால்
ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் தொடங்கி வைத்தார்கள்.


இந்த விழாவில் வந்திருந்த அத்தனை பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும் பொதுமக்களுக்கும் திருநீறு அணிவித்து அனைவருக்கும் அருளாசி வழங்கினார்கள். அச்சிறுப்பாக்கம் கிரிவலம் குழு சார்பாக வழங்கப்பட்ட ரக்ஷ கயிறு பக்தர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

இந்த கிரிவலத்தில் ஆகாச சொர்ண பைரவர் சுவாமி விசேஷ அலங்காரத்துடன் வஜ்ரகிரி மலையை கிரிவலம் வர, சுவாமியை தொடர்ந்து, சென்னை, பாண்டிச்சேரி. செங்கல்பட்டு, வந்தவாசி கும்பகோணம், திண்டிவனம், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் உட்பட்ட அனைத்து ஊர்களில் இருந்து வந்திருந்த பொதுமக்களும், சிவனடியார்களும், , ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சேர்ந்த அடியார்களும், தென்னிந்திய இந்து திருக்கோயில் கூட்டமைப்பு மாநில மாவட்ட, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட அத்தனை அடியார்களுக்கும் சிறப்பான அன்னதானம் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழு சார்பாக வழங்கப்பட்டது. பௌர்ணமி கிரிவல நிகழ்ச்சியில்
ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல பொறுப்பாளர் அச்சிறுபாக்கம்
எஸ்.செல்வம், கிரிவல குழு தலைவர் பிரிங்கி மலை மு. சரவணன், கலந்துகொண்டு விழா காண ஏற்பாடுகளை செய்தனர்

இதில், கிரிவல குழு பொருளாளர்எஸ்.தமிழ்வேலன், பசு பாதுகாப்பு இயக்கத் தலைவர்சத்தியநாராயண சாஸ்திரி,
வெற்றிச்செல்வன்,ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *