அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.7.67 கோடி மதிப்பீட்டில் 33 புதிய பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா அவர்கள் முன்னிலை வகித்தார்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உசேனாபாத் ஊராட்சியில் ரூ 31.68 லட்சம் மதிப்பீட்டிலும், இலுப்பையூர் ஊராட்சியில் ரூ 37.29 லட்சம் மதிப்பீட்டிலும், தாமரைக் குளம் கிராமத்தில் ரூ 31.45 லட்சம் மதிப்பீட்டிலும் தவுத்தாய்குளம் ஊராட்சியில் ரூ 34.84 லட்சம் மதிப்பீட்டிலும், பெரியநாகலூர் ஊராட்சியில் ரூ 38.95 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கயர்லாபாத் ஊராட்சியில் ரூ 40.80 லட்சம் மதிப்பீட்டிலும், நுரையூர் கிராமத்தில் 92.60 லட்சம் மதிப்பீட்டிலும்,
பூமுடையான்பட்டி கிராமத்தில் ரூ.75.80 லட்சம் மதிப்பீட்டிலும், பொய்யாதநல்லூர் ஊராட்சியில் ரூ.143.00 லட்சம் மதிப்பீட்டிலும், தாமரைக்குளம் கிராமத்தில் ரூ.65.74 லட்சம் மதிப்பீட்டிலும், வாலாஜாநகரம் ஊராட்சியில் அயன் ஆத்தூர் ரோடு – ராவுத்தன்பட்டி சாலை ரூ. 36.80 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் அம்மாகுளம் – ரெங்கசமுத்திரம் சாலை ரூ.126.18 லட்சம் ஆக ரூ. 7.67 கோடி மதிப்பீட்டில் 33 புதிய பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்துப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரபாகர், வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்