திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய பழவேற்காடு ஊராட்சி யில் உள்ள கொளத்து மேடு கிராம த்தைச் சேர்ந்த சுப்ரமணி முனிய ம்மாள் தம்பதியினர் மகள் காவியா (வயது 13) காவியாவிற்கு இதய நோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது
அவரிடம் கலைஞர் காப்பீடு அட்டை இல்லாததால் செய்ய முடியாமல் தவித்தனர். அப்போது திடீரென பழவேற்காடு ஊராட்சி மன்றத்திற்கு வந்த கூடு தல் ஆட்சியர் சுகபுத்ராவிடம் தனது கோரிக்கையை தெரிவித் தார் அவர் உடனடியாக சம்பந்தப் பட்ட அலுவலர்களிடம்தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள் ளுமாறு உத்தரவிட்டார்.
அப்போது பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன்,முன்னாள் கவுன்சிலர் பழனி,ஊராட்சிமன்ற உறுப்பினர் கள் சுராபுதின் அப்துல் சமது, ஆரோன்முஜீப், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
முடிவில் கலைஞர் காப்பீடு அட்டை விடுபட்ட நபர்களுக்கும் முகாம் நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தர விட்டார்.