கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சாதாரண நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் குமரன், நகர் மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், சுகாதார அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் வார்டு பகுதிகளில் தேவையான சுமார் 114 வளர்ச்சி பணிகள் செய்வதற்காக ஒப்புதல் பெறுவதற்கு மன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் வைக்கப்பட்டது
இதில் 12 வது வார்டுக்கு உட்பட்ட அக்காமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையின் நீர்வழிந்தோட தரைத் தளம் மற்றும் கழிப்பிடம் பராமரிப்பு பணி உள்ளிட்ட சுமார் 113 பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அப்போது டெண்டரை விரைந்து நடத்தி உடனே பணியைத் தொடங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர் முன்னதாக வால்பாறை மார்க்கெட் பகுதியில் வணிக வளாகம் அமைக்கும் பணியை ஒத்தி வைக்கக்கோரி ஆணையாளரிடம் வியாபாரிகள் திரண்டு வந்து கோரிக்கை விடுத்ததைத்தொடர்ந்து வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அந்த ஒரு தீர்மானத்தை ஒத்தி வைப்பதாகவும் மீதமுள்ள தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாகவும் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி அறிவித்ததை தன் தொடர்ந்து கூட்டம் முடிவடைந்தது
இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இந்நிலையில் வணிக வளாகம் அமைக்கும் பணி ஒத்திவைக்கப்பட்ட தகவல் அறிந்த வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்