தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருமால் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நகர்மன்ற உறுப்பினர் பங்கேற்பு .
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி திருமால் நகர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாலா வரவேற்புரை ஆற்றினர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் நகர்மன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான் கலந்து கொண்டு பள்ளி மற்றும் மாணவர்களின் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதில் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும், பள்ளியில் அடிபடை வசதிகளான கழிப்பறை, குடிநீர் வசதி, கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில்பள்ளி ஆசிரியர்கள் புஷ்பலதா,பாரதி, சாந்தி, லில்லி புஷ்பம், சபிதா, நதியாமற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..