அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை கவுண்டர் நினைவு நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர்
தீரன் சின்னமலை கவுண்டர் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கலைவாணர் நகர்
ஏ.எம்.எம். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் செல்லம்பட்டி முருகன், முன்னாள் மாவட்ட தலைவர் அழகுராஜா, மாவட்டத் துணைத் தலைவர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரோஜினி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் முருகன், ஈஸ்வரன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் மாவட்டத் துணைத் தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தீரன் சின்னமலை கவுண்டர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு கவுண்டர் மகாஜன சங்க நிர்வாகிகள் கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றனர்.