எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
சீர்காழியில் அனைத்து கிறிஸ்துவ கூட்டமைப்பினர் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.800க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்பு போலீசார் பாதுகாப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சீர்காழியில் அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினர் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசு,மணிப்பூர் மாநில அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியும்,கண்ட கோஷங்களை எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர்.
பேரணியானது ரயில்வே நிலையத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதியின் வழியாக பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் காங்கிரஸ் துணை பொதுச் செயலாளர் கே பி எஸ் எம் கனிவண்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் மத போதகர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் மத்திய மணிப்பூர் மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது
மணிப்பூர் கலவரத்தில் ஆலயங்களை இடித்தவர்கள் கைது செய்ய வேண்டும் இடிக்கப்பட்ட ஆலயங்களை அரசு செலவிலே கட்டித் தர வேண்டும் மணிப்பூர் கலவரத்தை பொறுப்பேற்றுக் கொண்டு பாரத பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் மேலும் பெண்களை நிர்வாணப்படுத்தி வீதிகள் இழுத்துச் சென்று கற்பழித்த தூக்கு தண்டனையும் சாகும் வரை ஆயுள் தண்டனையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்