வலங்கைமான் உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ
அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமையையொட்டி அபிஷேக ஆராதனை, திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சுப்பா நாயக்கன் தெருவில் உள்ள இறைவன் காட்சியளித்த ஸ்தலம், திருமணத்தடை நீக்கி குழந்தை வரம் அருளும் அருள்மிகு உண்ணா முலையம்மன் சமேதஸ்ரீ அருணாச்சலே ஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு இராகு காலம் நேரமான காலை 10.30 மணி க்கு மேல் 12மணிக்குள்சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெறு
வது வழக்கம்.
அதேபோல்நேற்று ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக் கிழமையையொட்டி காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை யையும், மாலை 6மணிக்கு சுமங்கலி பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை நடைப் பெற்றது. நிகழ்ச்சியில்முதல் திரு விளக்கைகும்பகோணம் அன்ன பூர்ணா குரூப்ஸ் ஆர்.லெட்சுமி பாலா ஏற்றி வைத்து துவங்கி வைத்தார். இதில் 205சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராகதிருப்பூர் இந்தியன் ஸ்டீல் உரிமையாளர்எஸ். கே. மணி (எ) துரை,ஆலயத்தின் நிர்வாக அதிகாரி ஆ. ரமேஷ்,பரம்பரை அறங்காவலர்கே. நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளைஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட் டளை சிறப்பாக செய்து இருந்தனர். நிகழ்வில்
ஏராளமான பக்தர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.