சோழவந்தான்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண்.என் மக்கள் யாத்திரையை
சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாராயணபுரம் தொடங்கினார் அப்போது மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் மாவட்ட மற்றும் மண்ட நிர்வாகிகள் கதிர்வேல் அழகர்சாமி .மகளிர் அணி செல்வி. முருகேஸ்வரி தசரதசக்கரவர்த்தி. ஜெயபாண்டி முத்துராமன். ராஜாராமன்.ஆகியோர் பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர்.
இதன்பின்னர்ஊத்துக்குளி தென்கரை சோழவந்தான் வைகை பாலம் வட்ட பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம் கடைவீதி வழியாக. பாதை யாத்திரை மேற்கொண்டு பின் காமராஜர் சிலை அருகில் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்து விளக்கி பேசினார்.
தமிழகத்தில் பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுக தற்போது 30 சதவீத கமிஷன் ஆட்சி மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறது என்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வரும் அனைத்து திட்டங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மேற்கொள்ளும் திராவிட முன்னேற்ற கழகம் அரசு மது விற்பனையில் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது ஏன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் பாட்டில்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தையும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தையும் ஸ்டிக்கர் ஒட்டி வைக்காமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கி ன்றார்களே.எனவும்.தற்போது தமிழகத்தில் நடந்து வரும் பத்திரப்ப திவுத்துறையின் பல்வேறு முறைகேடுகள் குறித்தும் கேள்வி எழப்பினார்.
மேலும்.60.வயது மேல் உளளோருக்கு பென்சன் திட்டம் விவசாயிகளூக்கு உரமானியம் உள்ளிட்டவைகள் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.