ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் வட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் வளரிளம் பருவ மாணவர்களுக்கான மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டி ஆர் பி ராஜா ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் வளரிளம் பருவ மாணவர்களுக்கான மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சியினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி மற்றும் தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மாவட்ட தாட்கோ தலைவர் உ.மதிவாணன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் .பூண்டி.கே.கலைவாணன்மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் அவர்கள் உடனிருந்தனர்.
நிகழ்வில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது…
தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களின் தலைமையில் செயல்படும் அரசானது பள்ளி கல்வித்துறையின் வாயிலாக மட்டுமின்றி, அனைத்து துறையின் வாயிலாக மாணவர்களின் எதிர்காலத்தினை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
மாணவர்களாகிய நீங்கள் உங்களது ஆசிரியர்களை ஆசிரியர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காது உங்களது இரண்டாம் பெற்றோர்களாக நீங்கள் நினைக்க வேண்டும். அவர்கள் பெற்ற குழந்தைகளை விட உங்களிடமே அதிகளவில் நேரம் செலவிடுகிறார்கள்.
உங்களுக்கான ஏணி படிகளாக செயல்படுகின்ற அவர்களை நீங்கள் மதிக்க வேண்டும். குறிப்பாக உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர் வழங்கும் அறிவுரையை உதாசினப்படுத்தாமல் அக்கருத்துக்களை ஏற்று வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது
பள்ளி மாணவியர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடர்ந்து பல்வேறு திடடங்களை பள்ளி மாணவர்களுக்காக அறிவித்து கொண்டே வருகிறார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில். குறிப்பாக, முதல்வரின் காலை உணவுத்திட்டமும், நான் முதல்வன் திட்டமும் பெருமளவிலான வெற்றி பெற்ற திட்டமாகும். குறிப்பாக, நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஒராண்டு நிறைவடைய போகிறது.
பள்ளி மாணவர்களாகிய நீங்கள் நான் முதல்வன் திட்டத்தினை பற்றி முழு புரிதலை தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு எந்த துறையின் மீது ஆர்வம் உள்ளதோ அதில் தனிகவனம் செலுத்தி உங்கள் தனி திறனை வளர்த்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். உங்களுக்கான ஆர்வம் படிப்பை விட விளையாட்டில் என்றால் அதற்கான தனி திறமையை வளர்த்து முன்னேற வேண்டும் என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
தொடர்ந்து, திருவாரூர் பூண்டி.செல்வம் நினைவு அறக்கட்டளையின் சார்பாக 2022-2023ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு தங்க பதக்கமும், பரிசுத்தொகையினையும், 2023ம் ஆண்டிற்காக நீட் தேர்வில் 7.5 சதவீத அரசு உள்ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் மருத்துவ படிப்பிற்கு தேவையான உபகரணங்களை பள்ளிகல்வித்துறை அமைச்சர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு வர்த்தகத்துறை அமைச்சர் வழங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து, காட்டூர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் ஐந்து பள்ளிகளை சேர்ந்த 40 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் மற்றும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு வர்த்தகத்துறை அமைச்சர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கினார்கள்.
நிகழ்வில், இணை இயக்குநர் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முனைவர்.குமார், இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் லதா, மாவட்ட வருவாய் அலுவலர் க.சண்முகநாதன் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவர் .உமாபிரியா பாலசந்தர், துணைத்தலைவர் பாலசந்தர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், காட்டூர் ஊராட்சிமன்ற தலைவர் விமலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.