செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை

செய்யாறு அருகே கூடுதல் எடையுடன் இருந்த நெல் மூட்டைகள் ஏற்றிய லாரியை சிறைபிடித்த விவசாயிகள் வியாபாரிகள் போலீஸாருடன் வாக்குவாதம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பொக்கசமுத்திரம், நாட்டேரி, தென்னம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சொணவாரி பட்டத்தில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. சொணவாரி பட்டத்துக்காக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாததால், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் முகவா் மூலம் ஆரணியைச் சோந்த வியாபாரிக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

பொக்கசமுத்திரம் கிராமத்தில் விவசாயிகளிடம் வாங்கிய நெல் மூட்டைகளை லாரியில் கொண்டு செல்ல முயன்றனா். அப்போது, சில நெல் மூட்டைகளில் அளவுக்கு அதிகமாக நெல் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை மீண்டும் எடை போட வேண்டும் என்று ஆரணி வியாபாரியிடம் வலியுறுத்தினா்.

இதையடுத்து, நெல் மூட்டைகளை எடை போட்டபோது, ஒரு மூட்டைக்கு 75 முதல் 80 கிலோ வரை இருக்க வேண்டிய நிலையில், 90 கிலோவுக்கு மேல் எடை இருந்ததால், விவசாயிகள் எடை போடும் ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நெல் மூட்டைகள் ஏற்றிய லாரியை சிறைபிடித்தனா்.

தகவல் அறிந்து வந்த பிரம்மதேசம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, நெல் எடை போடும் இயந்திரம் பழுதாகி இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, கூடுதல் எடை கொண்ட மூட்டைகளுக்கு உரிய விலையை கொடுப்பதாக நெல் வியாபாரி விநாயகமூா்த்தி ஒப்புக்கொண்டாா். இதையேற்று, விவசாயிகள் வாக்குவாதத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *