திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊராட்சி இந்த ஊரா ட்சிக்குட்பட்ட தச்சூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் கிராம நிர்வாக அதிகாரி கயல்விழி முன்னிலை யில் கிராம உதவியாளர் வேணு கோபால், தன்னார்வலர்கள் நிஷா, லாவண்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு பஞ்செட்டி ஊராட்சி சேர்ந்த பொதுமக்களிடம் கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவ ங்களை பெற்றனர் அப்பொழுது ஊராட்சி சேர்ந்த ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது விண்ணப்ப படிவங்களை பதிவு செய்து சென்றனர்.