மதுரை பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீமதி பங்கேற்பு….
ஜெர்மெனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்ற சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மதுரை பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் அமைப்பானது நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு ஜெர்மனியில் சர்வதேச அளவிலான சிறப்பு ஒலிம்பிக்ஸ் கோடைகால விளையாட்டுப் போட்டிகளானது கடந்த 2023 ஜூன் மாதம் 17 ம் தேதி முதல் 25 ம்தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் 180 நாடுகளிலிருந்து சுமார் 7,000 அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள். 3,000 பயிற்சியாளர்கள். 20,000 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் என 26 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இந்தியாவிலிருந்து 59 பயிற்சியாளர்களும். 202 அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் 15 பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகத்திலிருந்து 3 பயிற்சியாளர்களுடன் 16 அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் 2 யூனிபைடு சக விளையாட்டு வீரர்களும் ஆக மொத்தம் 18 பேர்கள் இவ்விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக மதுரை மாவட்டத்திலிருந்து மொத்தம் 6 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டதில் மதுரை, சிக்கந்தர்சாவடியில் அமைந்துள்ள பெத்சான் சிறப்பு பள்ளியிலிருந்து மட்டும் 5 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். எமது பள்ளியிலிருந்து இரண்டாவது முறையாக சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்
என்பது பெரு மகிழ்ச்சிக் குரியது.ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில் வாலிபால் விளையாட்டில் இந்திய ஆண்கள் அணியின் சார்பில் வெண்கலப் பதக்கம் வென்று வந்த மதுரை பெத்சான் சிறப்புப்பள்ளி விளையாட்டு வீரர்களின் பெயர் வாலிபால் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றவர்கள் மாதேஷ்பாபு. (வயது 21 )கமலேஷ், (வயது 22)ஏனைய மூன்று விளையாட்டு வீரர்களும் புட்சல் (கால்பந்து ) இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு முறையே நான்காவது இடத்தைப் பெற்றனர்.
கலந்து கொண்ட மாணவர்கள் , விளையாட்டு மற்றும் பதக்க விபரம்(கால்பந்து) சூர்யா, (வயது 19) முகேஷ் சுந்தர், (வயது 26) நான்காவது இடம்நாகவேல் (வயது 37)முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி:
கடந்த மாதம் சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டில் அறிவுசார் குறையுடையோர்க்கான எறிபந்து போட்டியில் தங்கப்பதக்கத்தை எமது பள்ளி விளையாட்டு வீரர்கள் வென்று வந்த மாணவர்கள் சூர்யா, (வயது 19)கமலேஷ். (வயது 22)
முத்துக்குமார், வயது 26மாதேஸ்வரன், (வயது 20) எறிபந்து போட்டி யில் தங்கப்பதக்கம் பெற்றவர்கள் மாதேஸ்பாபு. (வயது 21)ராஜராஜன், (வயது 34)ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது. இவ்விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் பெத்சான் சிறப்பு பள்ளியின் முதல்வர் ரவிக்குமார் வரவேற்று பேசினார். பின்பு சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீரர்களை அறிமுகம் செய்து சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இதுவரை பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்கள் பெற்ற வெற்றிகளைப் பற்றி சிறப்பு கல்வியாசிரியர் சைக் ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீமதி சிறப்புரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ராஜா மதுரை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சாமிதுரை தொழிலதிபர்கள் சுரேஷ் ,ஜவஹர் ,சாமுவேல் , ஜாய் கோச், கரூர் ,ஆனந்தகுமார் இணைச் செயலாளர். நா.ம.ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ஹனிஃப் தயூப். தலைவர் மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் ராஜா வாழ்த்துரை வழங்கினர்.
புரவலர் மதுரை. இவ்விழாவில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். பள்ளியின் தலைவர் ஜெயசீலன் நன்றி கூறினார்.