ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுந்தரவளாகம் பள்ளிக்கு மாநில எழுத்தறிவு விருது
மதுரை கலைஞர் நூற்றாண்டு கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பள்ளி சாரா இயக்கம் சார்பில் நடைபெற்ற புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாநில எழுத்தறிவு விருது வழங்கும் விழாவில் கடந்த ஆண்டில் பள்ளி சாரா கல்வி இயக்கத்தின் சார்பில் 2022-23 ல் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையம் சுந்தரவிளகத்தில் சிறப்பாகவும் முன்மாதிரியாகவும் செயல்பட்டமைக்காக திருவாரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சுந்தரவி ளாகம் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரிய பயிற்றுநர் ,மைய தன்னார்வலர் ஆகியோருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியும் மாநில எழுத்தறிவு விருதும், பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இப்பள்ளியின் தலைமை ஆசிரியை பிச்சையம்மாள் ஆசிரியர் பயிற்றுநர் ச. கலைச்செல்வன் தன்னார்வலர் கா . வளர்மதி ஆகியோருக்கு திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ. புகழேந்தி வட்டார கல்வி அலுவலர்கள் இளங்கோவன் , செல்வம் வட்டார வள. மைய மேற்பார்வையாளர் சாந்தி ஆசிரியர் பயிற்றுனர் கந்தப்பன் ஆகியோர் ஒன்றியத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல் பட்டமைக்காக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்