ஒரு ஏக்கர் நடவுக்கு 600 முதல் 800 கிலோ விதை போதும், இயற்கை முறை விரலி மஞ்சள் சாகுபடி யில் கூடுதல் மகசூல் பெறலாம். இதேபோல்7முதல்9மாதத்தில் அறுவடை செய்யலாம். என வேளாண் துறை யினர் தெரிவித்துள்ள னர்.
இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடியில் விரலி மஞ்சள் அல்லதுகிழங்கு (குண்டு) மஞ்சளை விதையாக பயன்படுத்தலாம, ஒரு ஏக்கர் நடவு செய்ய 600-800 கிலோ மஞ்சள் தேவை, மஞ்சளை அறுவடை செய்தவுடன் செதில பூச்சி மற்றும் பூஞ்சாணம் தாக்காத வாறு விதை நேர்த்தி செய்ய வேண்டும். மஞ்சளை நடுவதற்கு முன்பும் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இதனால் விதை முளைப்புத் திறன் நன்கு
இருக்கும். பூச்சி மற்றும் பூஞ்சாண தாக்குதல் இருக்காது. மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் மற்று மொரு முறை மஞ்சளை
பயிரிடக் கூடாது.
இவ்வாறு பயரிட்டால் நூற்புழத் தாக்குதல் அதிகமாகி பயிர் வளர்ச்சி குன்றி மகசூல்வெகுவாகப் பாதிக்கும். இதேபோல நூற்புழ அதிகம் தாக்கும் வாழை,மிளகாய், தக்காளி, கத்தரி, கனகாம்பரம் சாகுபடி செய்த தோட்டத் தில் மஞ்சளைப் பயிரிடக்கூடாது. மாற்றுப் பயிராககரும்பு, நெல் அல்லது தானியப் பயிர்கள் பயிரிடலாம். மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் மாற்றுப் பயிர் செய்த பின்பு மீண்டும் மஞ்சளைப் பயி
ரிடலாம். நிலத்தை 3-4 முறை உழ வேண்டும்.
கடைசி உழவின் போதுஒரு ஏக்கருக்க10டன் மக்கிய தொழ உரம் இடவேண்டும் அல்லது 2டன்மண்புழு உரம் இட வேண்டும். நிலத்தில் சாம்பல் சத்து குறைபாடுஇருந்தால் நெல் உமிச் சாம்பல் ஒரு ஏக்கருக்கு 500கிலோ வீதம் (1டிப்பர்)
கடைசி உழவின் போது இடலாம்.
நடவு செய்த 50நாட்கள் கழித்து பாரில்தூவிவிட்ட பலவகைப் பயிர்கள் நன்கு வளர்ந்துஇருக்கும். இவற்றை எல்லாம் பிடுங்கி ஒரு பார் விட்டு ஒரு பாரில் பரப்பி விட வேண்டும். இதற்கு மூடாக்கு என்று பெயர், பரப்பிய பாரில் நீர் பாயாதவாறு மண்ணால் மூடிவிட வேண்டும். இதனால் பாதியளவு பாசனம் போதுமானதாகிறது.
பயிர்களைப் பரப்பி வைப்பதால் நீராவிப் போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. 7முதல்9 மாதம்
கழித்து மஞ்சள் அறுவடை செய்யலாம். பச்சை வண்ணம் மாறி
இலை மஞ்சள் வண்ணமாகி வாடத் தொடங்கும்.
அச்சமயம் தாள்களை அறுக்கத் தொடங்கலாம்.
இதன் பின்னர் ஒரு மாதம் கழித்து மண் வெட்டி கொண்டு கிழங்குமற்றும் விரலியைச் சேதப்படுத்தாமல் அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறுவேளாண் துறையினர்
தெரிவித்துள்ளனர்.