செய்யாறு செய்தியாளர்
MS.பழனிமலை.
சதுரங்கப் போட்டி சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.
மண்டல அளவுலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, அனக்காவூா் ஆகிய ஒன்றியங்கள் சாா்பில் மண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகள் செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் கடந்த ஆக.3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தோ அமெரிக்கன் பள்ளி மாணவா்கள், 14 வயது ஆண்கள் பிரிவில் மு.சந்தோஷ் முதலிடமும், 19 வயது ஆண்கள் பிரிவில் ரா. விஷ்வா மூன்றாம் இடமும், 17 வயது பெண்கள் பிரிவில் ரா.ஐஸ்வா்யலட்சுமி முதலிடமும், 19 வயது பெண்கள் பிரிவில் பி. நவீனா முதல் இடத்தையும் பிடித்தனா்.
இதன் மூலம் இந்த மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். பாராட்டு விழா: பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவா்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் சி.ராதிகா, சு.அருண்குமாா். ஜெ. பாலமுருகன்.
கே. சக்திவேல் ஆகியோரை பள்ளித் தாளாளா் ராதாகிருஷ்ணன், இயக்குநா் சுவதந்திரா ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் அ.ப. சையத் அப்துல் இலியாஸ் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்தினா்.