திருவள்ளூர்
பொன்னேரி நூலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட புதிய தேரடி தெருவில் தலைமை நூலகம் உள்ளது.இதில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக் கப்பட்டது.
இதனையடுத்து நூலகத்தின் வாசகர் வட்ட தலைவரும் பொன் னேரி நகராட்சி முன்னாள் கவுன் சிலரும் ஒப்பந்தகாரருமான ஜோதீஸ்வரர் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகராட்சி முன்னாள் துணைத் தலைவரும் திமுக நகர செயலாளர் வக்கீல்ஜி ரவிக்குமார், பங்கேற்றார்.
மேலும் வாசகர் வட்ட துணைத்தலைவர் வெல்டன் வாசன், பொருளாளர் ரவிச்சந்தி ரன், நூலக சங்கர் தியாகராஜன், நந்தகுமார், நூலக பணியாளர் ஷோபனா, மற்றும் வாசகர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.