பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம்..
திருஉருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மறைந்த திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுகவின் பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமையிலும் , பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் முன்னிலையிலும் முக்கிய வீதிகளில் அமைதி பேரணியாக வந்து பாபநாசம் அண்ணாசிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருஉருவ படத்திற்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.