நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் விவேகானந்தா பார்மசி, நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பிசியோதெரபி கல்லூரி உள்ளிட்ட பாரா மெடிக்கல் கல்லூரிகளின் விளையாட்டு விழா (07.08.2023) நடைபெற்றது

இவ்விழாவிற்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் வித்யரத்னா டாக்டர் மு கருணாநிதி தலைமை தாங்கினார்.

மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி , துணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன் இணை செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராக நிதி அர்த்தநாரீஸ்வரன், துணை தாளாளர் டாக்டர் கிருபாநிதி இயக்குநர் நிவேதனா கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவேகானந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பிஸியோதெரபி கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.எ. ராஜ்குமார் வரவேற்புரை வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
திருச்செங்கோடு துணை காவல் துறை கண்காணிப்பாளர் பி. எம். இமயவரம்பன் ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைத்து விளையாட்டு போட்டியை துவங்கி வைத்தார்.

பி. எம். இமயவரம்பன் பேசும் போது :- மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே மதிக்க கற்று கொள்ள வேண்டும்.மேலும் தங்கள் வாழ்வில் நோக்கம் மற்றும் குறிக்கோளை முன்னிருத்தி அதற்காக அயராது இடைவிடா முயற்சி செய்ய வேண்டும் அப்போது தான் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.

மேலும் இவ்விழாவில்
தடகள போட்டி கைப்பந்து , த்ரோ பால் போன்ற போட்டிகள் நடைபெற்றது இதில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் பார்மசி முதல் பரிசு அனுவர்ஷினி I Pharm D ,இரண்டாம் பரிசு சங்கீதா பிரியா II B Pharm .நர்சிங் முதல் பரிசு பூஜா II DGNM ,இரண்டாம் பரிசு சுபலட்சுமி I DGNM. பிசியோதெரபி முதல் பரிசு சந்தியா I BPT , முதல் பரிசு நவீன் பிரபு I BPT .அலைடு ஹெல்த் முதல் பரிசு கனிமொழி I PA (SVCP), முதல் பரிசு ஸ்ரீநிதின் ஈஸ்வர் I OTAT (VMCH) பதக்கம், சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

விவேகானந்தா பாரா மெடிக்கல் கல்லூரிகளின் இயக்குனர் டாக்டர் கேப்டன் கோகுலநாதன், கல்லூரி முதல்வர்கள் டாக்டர் சுமதி துணை முதல்வர் டாக்டர் கீதா ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர் முருகானந்தம் நன்றியுரை வழங்கினார்.

இந்த விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை நிகழ்வு மேலாளர் பேராசிரியர் த.ஸ்ரீதர் ராஜா செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *