நெசவுத்தொழிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் கோவை இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கைத்தறி ஆடையணிந்து உலக கைத்தறி தினத்தைக் கொண்டாடினர்.
கைத்தறி ஆடைகளை அணிவது நம் உடலுக்கு நன்மையளிக்கக் கூடியது. தற்போது அழிந்துவரும் தொழில்களில் ஒன்றாக மாறிவரும் நெசவுத்தொழிலுக்கும் நெசவாளர்களுக்கும் ஆதரவு தரும் வகையில் கல்லூரி மாணவிகள் வண்ணமயமான கைத்தறி ஆடைகளில் வலம்வந்தனர்.
கைத்தறிக்கு முக்கியத்துவம் தந்த நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கைராட்டை வடிவில் மாணவிகள் நின்றது காண்போரைக் கவர்வதாக இருந்தது. சமூக அக்கறையோடு மாணவிகள் எடுத்த இந்த முயற்சியைப் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.