தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தருமபுரி மாவட்ட இந்திய மூல நிவாசி காவல் படை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேருந்து வசதி மற்றும் நிழல் கூடம் அமைத்து தர வேண்டும், வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு ஒன்றிய, மாநில அரசு திட்டத்தால் ஒதுக்கப்பட்ட தொகுப்பு வீடு வழங்க வேண்டும், சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்,
100 நாள் வேலை திட்டம் வழங்கப்படாத நபர்களுக்கு அட்டை வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி மற்றும் அவர்களுக்கு உயிருக்கு சரியான பாதுகாப்பு உபகரண பொருட்களை ஏற்படுத்தி தர வேண்டும், அனைத்து கிராமத்திற்கும் விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி கூடம், அமைத்து தர வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தாயக மக்கள் கட்சி மாநிலத் தலைவர் தமிழ்செல்வன், மண்டல செயலாளர் தீனா, மாவட்ட செயலாளர் திருமாவளவன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் இந்திய மூல நிவாசி காவல் படையினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.