அலங்காநல்லூர்
பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் ராகுல்காந்தி நியமனம் செய்யப்பட்டதையொட்டி அவர் இன்று பாராளுமன்றத்திற்கு சென்றார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன், தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் சுப்பாராயலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, முன்னாள் வட்டார தலைவர் மலைக்கனி, அமைப்புசாரா தொழிலாளர் மாவட்ட தலைவர் சோனைமுத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் நகரத் தலைவர் விநாயகம், நகர தலைவர் சசிகுமார், சமயநல்லூர் வட்டாரத் தலைவர் செந்தில், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் மணிவண்ணன், ஒன்றிய துணைத் தலைவர் மலைராஜன், மற்றும் நிர்வாகிகள் திரவியம், தமிழன், கண்ணுச்சாமி, முத்தன், குமார், சின்னகாளை, ராஜீவ்காந்திபஞ்சாயத்து ராஜ் தலைவர் விஜயா, மாவட்ட கமிட்டி உறுப்பினர் மீனாட்சி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.