கோவை
சென்னைக்கு மாறப்போகும் மேற்கு மண்டல ஐஜி யை சந்தித்த அகில பாரத மக்கள் கட்சியினர்.
தமிழ்நாடு மேற்கு மண்டல ஐஜியாக பணியாற்றி வந்தவர் சுதாகர். இந்நிலையில் அண்மையில் தமிழ்நாடு அரசு பல்வேறு காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேற்கு மண்டல ஐஜி சுதாகர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். மேற்கு மண்டல ஐஜியாக பவானேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூடிய விரைவில் சுதாகர் சென்னையில் பதவியேற்று கொள்ள உள்ள நிலையில் அவரை அகில பாரத மக்கள் கட்சியினர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமநாதன் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் வடவள்ளி மண்டல தலைவர் வீரம் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.