வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திமுக தலைவரும் முன்னாள் முதல் வருமான கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாடிப்பட்டி பேரூர் திமுக சார்பாக அமைதிப் பேரணி நடைபெற்றது.
இந்த அமைதிப் பேரணிக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் முன்பாக துவங்கிய பேரணி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.பின்னர் பொதுமக்களுக்கு சேலை. அரிசி. உள்ளிட்டவைகளை வெங்கடேசன்,எம். எல்.எ. வழங்கினார்
இதில் ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன், பாலராஜேந்திரன்,
பேரூர் செயலாளர்கள் பிரகாஷ், சத்தியபிரகாஷ், பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன், ஜெயராமன். பொதுகுழ ஸ்ரீதர்.செயற்குழ சேகர் அவை தலைவர் பாலசுப்பிரமணியம். துணை தலைவர் லதாகண்ணன். ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டியன் முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ். உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மகளிரணி யினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.