நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டி கிளை கழக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு வானரமுட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான மாரியப்பன் தலைமையில் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வானரமுட்டி பஞ்சாயத்து தலைவர் இசக்கியம்மாள், திமுக பொருளாளர் மாரிராஜ், இளைஞர் அணி சார்பில் அருண்குமார், இசக்கிமுத்து, ராமலிங்கபுரம் கிளை செயலாளர் மகேந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், லட்சுமணதேவர், பேயாண்டி, முத்துமாலை உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் செய்திருந்தார்.