தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில்
மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதியிடம்
தென்காசியில் கட்டப்படும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில்;- தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சியை ஏற்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொடுத்தவர் காமராஜர் அவர்கள் பள்ளிகளில் மதிய உணவு தந்து பிள்ளைகளை படிக்க வைத்தவர் சீருடை தந்து ஏழை பணக்காரன் என்ற பாகுபாடை கழைந்தவர் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்படுத்தியவர் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தியவர் காமராஜர் அவர்கள் தென்காசி செங்கோட்டை குற்றாலம் பகுதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததை காமராஜர் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது அதனால் தென்காசியில் கட்டப்படுகின்ற நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்கள் இதில் பொருளாளர் சுப்ரமணியன் மாவட்ட தலைவர் ராஜ் நயினார் துணைச் செயலாளர் மோகன் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்