திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கொடூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிட வளா கத்தில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற் றது.
இம்முகாமினை ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி மகேந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத் தார் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.ஊராட்சி செயலாளர் கோபால் மற்றும் தன்னார்வலர் கள் கலைவாணி,ப்ரீதி, பூங்கோடி, ஆகியோர் பயனாளிகளின் விண் ணப்பங்களை பதிவு செய்தனர். இதில் ஊராட்சி சேர்ந்த பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பபடிவங்களை முகா மில் பதிவு செய்தனர்.