ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
இந்திய உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தலைமையில் இந்திய உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
அதன் பேரணியில் மருத்துவக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்
நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் உறுப்புகள் ஆண்டிற்கு பல ஆயிரக்கணக்கான மக்களை தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்கிறது.
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மாணவர்கள்,மருத்துவர்கள் ஏற்று பின்னர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை கையில் ஏந்தி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவிலிருந்து மருத்துவக் கல்லூரி வரை பேரணியாகச் சென்று விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்
நன் கொடையாளரிடமிருந்து கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல், இதயம் மற்றும் கணையம் போன்ற உறுப்புகள் தேவைப்படும் எட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும். கூடுதலாக, எலும்பு, தோல், இதய வால்வுகள், கார்னியா போன்றவற்றை தானம் பெற முடியும்