செய்யாறு செய்தியாளர்
MS.பழனிமலை
திருவண்ணாமலை மாவட்டம்
வெம்பாக்கம் அடுத்த ஜம்போடையை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ரஞ்சனி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் குடும்பத்தோடு இன்று ஆரணி அடுத்த முணுக்கப்பட்டு பச்சையம்மன் கோவிலுக்கு சென்றனர். கோவிலின் நுழைவு வாயிலில் அனைவரும் கற்பூரத்தை ஏற்றினர். குழந்தையை அருகே விட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்மபெண் குழந்தையின் கால் கொலுசை திருடினார். இதனை கண்ட குழந்தையின் தாயார் ரஞ்சனி கூச்சலிட்டார். அங்கிருந்து தப்பி ஓடிய மர்ம பெண்ணை விரட்டி சென்று பிடித்தனர்.
பின்னர் அந்தப் பெண்ணை பெரணமல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் திருவண்ணாமலையை சேர்ந்த ஜோதி (43), என தெரியவந்தது.
மேலும் போலீசார் ஜோதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு செய்தியாளர்
MS.பழனிமலை