தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூரில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாவை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள இந்திய மருத்துவ கழக அலுவலகத்தில் மட்றப்பள்ளி நல்லசாமரியன் கண் மருத்துவமனை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் இந்திய மருத்துவ கழக தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் வினோதினி, மாவட்ட பொருளாளர் வேல்முருகன் மற்றும் திருப்பத்தூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆனந்தன், லீலா, மனோகரன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..