தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
கதிரிமங்கலம் பகுதியில் பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் பகுதியில் வீரபத்திரர் வழிபாட்டு மன்றம் மற்றும் குருமன்ஸ் சேவையாட்டம் சங்கம் சார்பில் பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் விழா இன்று கலைநன்மணி விருது பெற்ற சிவ பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் லிங்கண்ணமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பரமசிவம், கோமதி கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் லலிதா மோகன்குமார், நிர்வாகிகள் குடியண்ணன், அருண், காளியப்பன், லிங்கன், குப்பன், மகேந்திரன் மற்றும் வீரபத்திரர் வழிபாட்டு மன்றம் மற்றும் குருமன்ஸ் சேவையாட்டம் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..