வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் வீர வரலாற்று பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான C.Ve.சண்முகம் அறிவுறுத்தலின் படி திண்டிவனம் நகரில் உள்ள 30 வது வார்டு முன்னாள் நகர மன்ற உறுப்பினரும் கிளைக் கழக செயலாளருமான N.V.R(எ) N.விஜயகுமார் தலைமையில் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில்30 ஆவது வார்டில் இருந்து மதுரை மாநாட்டிற்கு திரளாக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் அவைத் தலைவர் ஜான் பாய் வார்டு பிரதிநிதிகள் கேப்டன் ஆறுமுகம், மணிகண்டன்,மகளிர் அணி செயலாளர் லலிதா ,சரஸ்வதி,ரஷ்யா தில்சாத்,பானு, சத்தியா,மற்றும் வார்டு பொருளாளர் சரவணன்,செயற்குழு உறுப்பினர் சேட்டு,கோபி, சீனு,எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் லோகநாதன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.