கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை வியாபாரிகள் தங்கள் கடைகளை வைத்துள்ளதால் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் நிற்க முடியாமலும் பேருந்துகள் பேருந்து நிலையத்தினுள் சென்றுவர முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து நடைபாதை வியாபாரிகள் மற்றும் சில்லறை அங்காடிகள் வைத்துள்ளதால் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி முடித்துச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பருகூர் டெக்ஸ்டைல் நகரத்தில் இருக்கக்கூடிய ஊழியர்கள் என தினந்தோறும் பேருந்து நிலையத்தில் ஒருவித பயத்தோடு பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது
இது குறித்து பர்கூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பயணிகள் பயன்படுத்தும் வகையில் பர்கூர் பேருந்து நிலையத்தை மாற்றி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்