வலங்கைமான் அருகில் ஊத்துக்காடு பகுதியில் பாசன வாய்க்கால்களைசொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்
வலங்கைமான் அருகில் உள்ள ஊத்துக்காடு பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகதூர்வாரப்படாத கிளை
வாய்க்கால்களை விவசாயிகள் ஒன்று கூடி சொந்த நிதியில் தூர்வாரும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள ஊத்துக்காடு கிராமம் வெட்டாறு பிரிவு
வடக்கு ராஜன் வாய்க்கா ல் மூலம் சுமார் 800 ஏக்கர்
விலை நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக வெட்டாறு பிரிவு வடக்குராஜன் கிளை வாய்க்கா ல்களான சி மற்றும் டி.
வாய்க்கால்கள் தூர் வாரப் படவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக வாய்க்கால்கள் முழுமையாக நாணல்
மற்றும் காடுகளால் ஆக்கிரமிப்பான நிலையில்
பாசனத்திற்குகோ அல்லது வடிய விடுவத ற்கு தண்ணீர் செல்வத ற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. கடந்த இரண்டு
மாதங்களுக்கு முன் பெய்த கன மழையின் போது உபரி நீர் வெளி யேற வாய்ப்பு இல்லாமல்போனதை அடுத்து கோடை சாகுபடியாக செய்யப்பட்ட நெல் நடவுவயல்கள் மற்றும் பருத்தி வயல்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந் நிலையில் இந்த கிளைவாய்க்கால்களை தூர் வார வேண்டுமென கடந்த சில ஆண்டுகளாகஅரசுக்கு கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில்ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகளான நாகராஜ், மருதையன், தேவராஜன், குணசீலன்,ஜெயராமன் உள்ளிட்டவிவசாயிகள் ஒன்று சேர்ந்து சொந்தமாக நிதிதிரட்டி வாய்க்கால்களை தூர்வார திட்டமிட்டனர்.
இதனையடுத்து ஆறுகிலோ மீட்டர் தூரத்திற்கு மானேரி வாய்க்கால், தரிசு வாய்க்கால், மதகடிவாய்க்கால் ஆகியவை சுமார் ஒரு லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி
நடைப்பெற்று வருகிறது.