பெரியகுளம் அருகே மக்கள் தொடர்பு முகாம்.
தேனி, ஆக.10- தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே புதுக்கோட்டை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட முருகமலை ஊராட்சி அரசுப்பள்ளி வளாகத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா தலைமை தாங்கினார். இந்த முகாமில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன் வரவேற்பு உரையாற்றினார்.

சமூக நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை வேளாண்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு வழங்கப்படும் அரசின் திட்டங்கள் குறித்து தெளிவுபட எடுத்துரைத்தனர்.
இந்த முகாமில் 807 பயனாளிகளுக்கு ரூ.6,47,077 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் .வி .ஷஜீவனா வழங்கினார். அதனைத் தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ பெட்டகங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில், பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜுனன் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேலு, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ராஜ பாண்டியன், எண்டப்புளி ஊராட்சி மன்ற தலைவர் சின்ன பாண்டியன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன்,விஜயமாலா, வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், தங்கமுத்து குமார்,கணேசன், அருள்குமரன், அகிலன்,கற்பகம்,வித்யா,உட்பட அரசின் பல்வேறு துறை சார்ந்தஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் நல்லதம்பி , உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வைத்தொகுத்துவழங்கினர்.
நிகழ்ச்சிகளின் முடிவில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.