ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்; தி.சாருஸ்ரீ.,இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேளுர் ஊராட்சியில் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பயணியர் நிழல்குடையினையும், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட .24.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்டுவரும் பள்ளி கட்டடத்தினையும் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பாமினி ஊராட்சியில் 9.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்டு வரும் பயணியர் நிழல்குடையினையும், பாமினி ஊராட்சியில் சுந்தரபுரி சத்தரத்தடி குளம் 14.62 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாருதல் மற்றும் படித்துறை, வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதையும், பாமினி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி .5.67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறையினையும், பாமினி ஊராட்சியில் .22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், பாமினி ஊராட்சியில் .4.83 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதையும், பாமினி ஊராட்சியில் ரூ.45 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளி சமையலறை கட்டடம் பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கட்டிமேடு ஊராட்சியில் .5.80லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிவறை கட்டப்படடுள்ளதையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் .4.18 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ளதையும், 55 ஆயிரம் மதிப்பீட்டில் சமையலறை கட்டடம் பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ளதையும், கட்டிமேடு ஊராட்சி காளியம்மன் கோவில் வடக்குத்தெருவில் 7.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நெல் அடிக்கும் சிமென்ட் களத்தினையும், கட்டிமேடு மதினா தெருவில் ரூ.9.12 இலட்சம் மதிப்பீட்டில் 164 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக திருத்துறைப்பூண்டி வட்டாரம் கொருக்கை ஆரம்ப சுகாதார நிலையத்தின் பாமனி துணை சுகாதார நிலையத்திற்குட்பட்ட முள்ளுர் அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் நடைபெற்ற மிஷன் இந்திரதனுஷ் விடுப்பட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு தடுப்பூசி வழங்கப்பெற்ற பயனாளிகளுக்கு இணையவழி சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.
ஆய்வில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கீர்த்தனாமணி, உதவி இயக்குநர் மரு.பாஸ்கரன், மரு.முகம்மது முகைதீன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், .அன்பழகன், ஒன்றிய செயற்பொறியாளர் சூரியமூர்த்தி, வட்டாட்சியர் காரல்மார்க்ஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.