பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டத்தில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பழங்குடியினருக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பழங்குடி இருளர் மேம்பாட்டு குழு சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பழங்குடியினர் மேம்பாட்டு குழு மாநிலத் தலைவர் தர்மதுரை தலைமையில் நடைபெற்றது.
இதில் பழங்குடி மேம்பாட்டு குழு துணை தலைவரும் நடுவலூர் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணன், மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி, மாவட்ட அவைத்தலைவரும் கொடுக்கூர் ஊராட்சி மன்ற தலைவருமான மேகலா சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக முனைவர் ராஜ்கலா கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் பழங்குடி இருளர் மேம்பாட்டு குழு மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், செந்துறை ஒன்றிய தலைவர் அழகுதுரை, தா.பழூர் ஒன்றிய தலைவர் சக்திவேல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை குழு உறுப்பினர்கள் என சுமார் 300 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு கூட்டத்தின் நிறைவாக பழங்குடி இருளர் மேம்பாட்டு குழு மாவட்ட இளைஞர் செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.