அதிமுக மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு மறுக்கன்று வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அழைப்பு
சோழவந்தான்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் அருகில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி .உதயகுமார் வருகின்ற ஆக.20.ல் மதுரையில் நடைபெறும் அதிமுக பொன் விழா ஆண்டு மாநாட்டிற்கு கலந்துகொள்ள பொதுமக்களுக்கு மரகன்று கொடுத்து அழைப்பு விடுத்து பின்னர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் மாநாடு குறித்த விளம்பர பதாகைகள் மற்றும் மாநாடு லோகோவை வெளியிட்டார்.
இதன் பின்னர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது ஆக.20..ல் மதுரையில் நடைபெறும்பொன்விழா மாநாட்டில் அதிமுகவின் கழக முன்னோடிகளுக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படும் என்றும் தமிழகத்தில் திமுக அரசு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசை அகற்ற இந்த பொன்விழா மாநாடு ஒரு முன்னோட்டமாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா மாணிக்கம் சரவணன்.தமிழசன். மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல். சோழவந்தான் நகர் செயலாளர் முருகேசன் மாவட்ட மகளிர் அணி லட்சுமி மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் வனிதா தொழில்நுட்ப பிரிவு பிரேம்குமார் பேரூர் கவுன்சிலர்கள் சண்முகபாண்டியராஜா ரேகா ராமச்சந்திரன் கணேசன் பேரூர் துணைச் செயலாளர் தியாகு இளைஞர் அணி கேபிள் மணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.