ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எனது மண் எனது தேசம் மரக்கன்று நடும் விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவாரூர் மாவட்ட நேரு நேரு யுவகேந்திரா சார்பாக 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எனது மண் எனது தேசம் ” என்ற நிகழ்ச்சியின் மூலம் வரும் 09.08.23 முதல் 15.08.2023 வரை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் 75 மரக்கன்று நடுவதற்காக திட்டமிட்டப்பட்டு அதன் முதல் பகுதியாக மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சியின் துவக்க விழாவை திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் 09.08.2023 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி சாரு ஸ்ரீ அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்து சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சௌந்தர்யா அவர்கள்,மாவட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜா ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் வரதராஜன் , முன்னாள் ராணுவ படை வீரர் களான பாலசுப்பிரமணியம் மற்றும் ராஜேந்திரன் , நாம்கோ தொண்டு நிறுவன இயக்குனர் ஜீவானந்தம் நேரு யுவ கேந்திரா திட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் அவர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,தேசிய இளையோர் தொண்டர்கள் மற்றும் இளைஞர் மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *