திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யம் சின்னம்பேடு ஊராட்சியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள் மிகு பாலசுப்பிரமணியர் திருக் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலம் வந்து மூலவ ருக்கு பாலபிஷேகம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி ஜே கோவிந்தராஜன், இந்து அறநிலைத்துறை திருவள் ளூர் மாவட்ட குழு உறுப்பினர் லட் சுமி நாராயணன், திமுக மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காசு ஜெகதீசன், மீஞ்சூர் நகர திமுக செயலாளர் தமிழ் உதயன், உள்ளி ட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்க ளாக கலந்து கொண்டனர்.
இதனையடுத்து மூலவருக்கு பல் வேறு சிறப்பு பூஜைகள் நடை பெற் றது இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சிறுவாபுரி கோவில் செயல் அதிகாரி கோ.செந்தில்குமார் செய்திருந்தார்.
முன்னதாக பால்குட ஊர்வலத்தை நடிகரும் பாடலாசிரியருமான கவி ஞர் பா. விஜய் துவக்கி வைத்தார்.