கலைஞர்-100 இலக்கிய விழா”
திட்டமிடல் கூட்டம் 20-ஆம் தேதி திருச்சியில் நடக்கிறது …
தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பாக…
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 100 -ஆவது பிறந்த நாள் விழா “கலைஞர்-100 இலக்கிய விழா” என்ற பெயரில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பாக விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.
இதற்கான திட்டமிடல் கூட்டம் ஆகஸ்ட் 20- அன்று திருச்சியில் நடக்க உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பாக கவிஞர் பேரா தெரிவித்து இருப்பதாவது…
^தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பான நிகழ்வுகளுடன் நடந்து வருகிறது.
நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் உட்பட பல தமிழ்ச் சங்கங்களும் நிகழ்ச்சிகளை தனித்தனியாக நடத்தி வருகின்றன.
தற்போது,பல தமிழ்ச் சங்கங்கள் ஒன்று சேர்ந்து “தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கம்” என்ற அமைப்பு சார்பாக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழாவை மாபெரும் இலக்கிய விழாவாக நடத்த உள்ளனர்.
“கலைஞர்-100 இலக்கிய விழா” என்ற பெயரில் நடக்க இருக்கும் இந்நிகழ்ச்சி சென்னை மாநகரில் நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது.
இதில் தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .
விழாவில் சிறப்பு மலர் ஒன்று வெளியிடவும் உள்ளது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் திட்டமிடுவதற்காக ஆலோசனைக் கூட்டம் ஒன்று திருச்சியில் ஆகஸ்ட் 20-அன்று நடைபெற இருக்கிறது.
இந்த திட்டமிடல் கூட்டய்திற்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் மற்றும் இலக்கிய அமைப்புகளின் திர்வாகிகள் இணைந்து வருகை தர வேண்டும் என அழைக்கிறேன்”
…இவ்வாறு கவிஞர் பேரா தெரிவித்துள்ளார்.